சிறந்த மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும்-நெல்லை நாடார் உறவின்முறை சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
தந்தை இறந்து பொருளாதாரம் இல்லாமல் கஷ்டப்படும் குழந்தைகளுக்கும், பள்ளியில் சிறந்த மாணவ-மாணவிகளுக்கும் கல்வி உதவித்தொகை வழங்குவது என நெல்லை நாடார் உறவின்முறை சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நெல்லை:
தந்தை இறந்து பொருளாதாரம் இல்லாமல் கஷ்டப்படும் குழந்தைகளுக்கும், பள்ளியில் சிறந்த மாணவ-மாணவிகளுக்கும் கல்வி உதவித்தொகை வழங்குவது என நெல்லை நாடார் உறவின்முறை சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செயற்குழு கூட்டம்
நெல்லை நாடார் உறவின்முறை சங்கத்தின் செயற்குழு கூட்டம் தாழையூத்தில் உள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு சங்கத்தலைவர் எஸ்.அசோகன் நாடார் தலைமை தாங்கி பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் தலைவர் எஸ்.எஸ்.எஸ்.நாதன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
கல்வி உதவித்தொகை
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
சமுதாயத்தை சேர்ந்த தந்தை இல்லாத தொழில் கல்வி படிக்கும் குழந்தைகளுக்கு உதவும் வகையில் புதிய சேவை திட்டங்கள் தொடங்க வேண்டும். தந்தை இறந்து பொருளாதாரம் இல்லாமல் கஷ்டப்படும் குழந்தைகளுக்கும், பள்ளியில் சிறந்த மாணவ-மாணவிகளுக்கும் கல்வி உதவித்தொகை வழங்குவது. பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்களுக்கு முதியோர் உதவித்தொகை மாதாமாதம் வழங்குவது. சமுதாயத்தைச் சேர்ந்த நபர் இறந்து விட்டால் இறுதிச்சடங்கு செய்ய பணம் இல்லாமல் தவிக்கும் ஏழை குடும்பத்திற்கு இலவசமாக இறுதிச்சடங்கு செய்ய உதவி செய்வது.
சமுதாயத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரியில் கல்வி, விளையாட்டில் சாதனை படைத்தவர்களை பாராட்டி கவுரவிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில், நெல்லையில் காமராஜர் வெண்கல சிலை அமைக்க உதவி செய்த டாக்டர் பிரேமச்சந்திரன், மகாகிப்சன் நாடார், செந்தில்வேல் நாடார் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில், சங்க துணைத்தலைவர்கள் தனசீலன் நாடார், அந்தோணி ஜெயபாண்டி நாடார், மகாலிங்கம் நாடார், செயலாளர் எம்.பன்னீர்செல்வம் நாடார், துணைச்செயலாளர்கள் மனோகர் நாடார், சுரேஷ் நாடார், பாக்கியராஜ் நாடார், இணைச்செயலாளர் செல்வராஜ் நாடார், பொருளாளர் வி.ராமச்சந்திரன் நாடார், கவுரவ ஆலோசகர்கள் செல்வகுமார் நாடார், இளங்கோ நாடார், கமிட்டி உறுப்பினர்கள் ஆறுமுகம் நாடார், வேந்திமுத்து நாடார், ஆறுமுகநயினார் நாடார், தாளசேகர் நாடார், ஜான்சன் தெய்வநாயகம் நாடார், சண்முகராஜ் நாடார், தங்கமணி நாடார், ராஜ பிரகாஷ் நாடார், ஜான்சன் நாடார், சக்திவேல்முருகன் நாடார், சரத்கண்ணன் நாடார், ராஜ்குமார் நாடார், கோபாலகிருஷ்ணன் நாடார், எட்வர்ட் ராஜா நாடார், பசுபதி நாடார், கோபிகண்ணன் நாடார், சுரேஷ் ஆபிரகாம் நாடார், பெத்துராஜ் நாடார், செந்தில் நாடார், வில்லியம் ஜேம்ஸ் நாடார், பாஸ்கரன் நாடார், ஜோசப்ராஜ் நாடார், ராமலிங்கம் நாடார், சோமசுந்தரம் நாடார், காமராஜ் நாடார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.