பெண்களின் முன்னேற்றத்துக்காகசேவை புரிவோர் விருது பெற விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்துக்காக சேவை புரிவோர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Update: 2023-05-18 18:45 GMT

பெண்கள் முன்னேற்றத்துக்காக சேவை புரிபவர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

விருது

பெண்களின் முன்னேற்றத்துக்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்துக்கு தமிழக முதல்வரால் ஒவ்வொரு ஆண்டும் 12 கிராம் தங்கம் மற்றும் சான்று வழங்கப்பட்டு வருகிறது. 2023-ம் ஆண்டுக்கான விருது பெற தகுதியுடையவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த விருது பெற தமிழ்நாட்டை பிறப்பிடமாகக் கொண்டவராக இருக்க வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூகநலன் சார்ந்த நடவடிக்கைகள் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றுபவராகவும், தொண்டு நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கலாம்

மேற்கண்ட தகுதி உடையவர்கள் http://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் 10.06.2023-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதன்பிறகு விண்ணப்பதாரர் தாங்கள் புரிந்த சாதனைகள் குறித்த கருத்துருவை 12.06.2023-க்குள் மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட கலெக்டர் வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி, தொலைப்பேசி எண்:0461-2325606 என்ற முகவரியில் நேரில் வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்