ஐ.ஐ.டி.யில் படிக்கும் மாணவர்களுக்குரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை

ஐ.ஐ.டி.யில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

Update: 2023-09-28 18:45 GMT

ஐ.ஐ.டி.யில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

கல்வி உதவித்தொகை

தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம்., ஐ.ஐ.ஐ.டி, என்.ஐ.டி. மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பு படிக்கும் தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் பிரிவை சேர்ந்த குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்குள் உள்ள மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

அதன்படி 2023-2024-ம் கல்வியாண்டில் இந்த கல்வி உதவித்தொகையை பெற புதிதாக விண்ணப்பிக்க அல்லது பதிவை புதுப்பிக்க தகுதியான மாணவர்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களை அணுகி அல்லது https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship-schemes என்ற இணையதள முகவரியிலிருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பித்து அவர்களின் பரிந்துரையுடன் சான்றொப்பம் பெற்று சென்னை சேப்பாக்கம் எழிலகம் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நல இயக்கக ஆணையர் போன்:044-29515942, இமெயில்: tngovtiitscholarship@gmail.com என்ற முகவரிக்கு பூர்த்தி செய்த புதுப்பித்தல் விண்ணப்பங்களை 15.12.23-க்குள் அனுப்ப வேண்டும்.

புதிய விண்ணப்பங்களை 15.1.24-க்குள் அனுப்பி வைக்க வேண்டும். இந்த தகவலை ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்