திருப்பரங்குன்றத்தில் மாணவ, மாணவிகளுக்காக நடைபாலம் அமைக்க வலியுறுத்தி அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருப்பரங்குன்றத்தில் மாணவ, மாணவிகளுக்காக நடைபாலம் அமைக்க வலியுறுத்தி அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-06-21 01:02 GMT

 திருப்பரங்குன்றம்,


திருப்பரங்குன்றத்தில் மாணவ, மாணவிகளுக்காக நடைபாலம் அமைக்க வலியுறுத்தி அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு

திருப்பரங்குன்றம் ரெயில்வே மேம்பாலத்தின் கீழ்பகுதியில் தண்டவாளத்தை கடந்து பாதுகாப்பு இன்றி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சென்று வந்தனர். இந்த நிலையில் திருப்பரங்குன்றம் ரெயில்நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டது. மேலும், அகல ரெயில்பாதை உருவாக்கப்பட்டு அதிவேகமாக ரெயில்கள் சென்று வருகின்றன.

இதனையொட்டி நீண்டகாலமாக பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பயன்படுத்தி வந்த பாதை மூடப்பட்டது. உயிர், உடமைகள் பாதுகாப்பு கருதி ரெயில்வே பாதையை ரெயில்வே நிர்வாகம் மூடப்பட்டதை வரவேற்றபோதிலும் திருப்பரங்குன்றம் நகரில் இருந்து ஹார்விப்பட்டி, திருநகர் பகுதியில் உள்ள பள்ளிக்கு மாணவ, மாணவிகள் சென்று வருவதற்கும், ஹார்விப்பட்டி, திருநகர் மற்றும் திருப்பரங்குன்றத்தை சுற்றி உள்ள பல்வேறு கிராம மக்கள் திருப்பரங்குன்றம் சென்று வருவதற்கும் பாதுகாப்பான பாதை வசதி இல்லாத நிலை உள்ளது.

ஆர்ப்பாட்டம்

ரெயில் நிலையம் அருகே உள்ள நடைபாலத்திற்கு நீண்டதூரம் நடந்து சென்று பிளாட்பாரத்தை கடந்து வந்த போதிலும் நகருக்குள் செல்ல பாதை வசதி இல்லை. இதன் காரணமாக முதியோர்கள், குழந்தைகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் சுரங்கபாதை அல்லது நடைபாலம் அல்லது தானியங்கி வசதி செய்யப்பட வேண்டும். ஆஞ்சநேயர் கோவில் வளாகம் மற்றும் கருவாட்டு பாறை வளாகம் பகுதியில் மின்விளக்கு வசதியுடன் பாதை அமைத்து தரப்பட வேண்டும் என்று ரெயில்வே நிர்வாகத்தை வலியுறுத்தி நேற்று மாலையில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருப்பரங்குன்றம் பஸ் நிலையத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலர் விஜயா, முன்னாள் கவுன்சிலர்கள் ஆறுமுகம், ரமேஷ் (தி.மு.க), பழனிக்குமார், சுப்பிரமணி, (காங்கிரஸ்), முருகேசன் (ம.தி.முக), எஸ்.எம்.பாண்டி (மார்க்சிஸ்ட் கம்யூ), மகாமுனி (இந்திய கம்யூனிஸ்டு), ஆறுமுகம் (நாம் தமிழர்), முத்துக்குமார் (விடுதலை சிறுத்தை கட்சி), பூமிநாதன் (சமத்துவ மக்கள் கட்சி), சிவக்குமார்(மக்கள் நீதி மய்யம்) உள்ளிட்ட அனைத்து கட்சியினர் கலந்துகொண்டு ெரயில்வே நிர்வாகத்திற்கு எதிராக கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். ேமலும் அடுத்த மாதம் 4-ந் தேதி முழு கடை அடைப்பு போராட்டமும், 19-ந் தேதி ரெயில் மறியல் போராட்டமும் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்