மாநில அளவிலான வாலிபால், கபடி போட்டிக்கு மயிலாடுதுறை மாவட்ட போலீசார் தகுதி
மாநில அளவிலான வாலிபால், கபடி போட்டிக்கு மயிலாடுதுறை மாவட்ட போலீசார் தகுதி பெற்றனர்.;
முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான போட்டிகள் மயிலாடுதுறையில் கடந்த மாதம் நடந்தது. இதில் வாலிபால், கபடி ஆகிய போட்டிகளில் மயிலாடுதுறை மாவட்ட போலீசார் அணி முதலிடம் பிடித்து மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றது. இதையடுத்து சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் மயிலாடுதுறை மாவட்ட போலீசார் பங்கேற்க உள்ளனர். மாநில போட்டிக்கு தகுதி பெற்ற போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா வாழ்த்து தெரிவித்தார். மயிலாடுதுறை சாய் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீருடை வழங்கினார். அப்போது மாவட்ட விளையாட்டு அலுவலர் அப்துல்லாஷா மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.