அரையாண்டு தேர்வு முடிந்து பள்ளி மாணவர்களுக்குவிடுமுறை விடப்பட்டது
அரையாண்டு தேர்வு முடிந்து, பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் விடுமுறை விடப்பட்டது
அரையாண்டு தேர்வு முடிந்து, பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் விடுமுறை விடப்பட்டது.
அரையாண்டு தேர்வு
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வுக்கு பிறகு நடப்பு கல்வி ஆண்டில் (2022-23) முறைப்படி பள்ளிக்கூட வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு கடந்த 2 வாரங்களாக நடைபெற்று வந்தது.
நேற்றுடன் இந்த தேர்வுகள் முடிவடைந்தது. பெரும்பாலான பள்ளிகளில் மதியத்துடன் தேர்வு முடிவடைந்தது. தொடர்ந்து மாணவர்களுக்கு 9 நாட்கள் விடுமுறை விடப்பட்டது.
மாணவர்கள் உற்சாகம்
இதையடுத்து பள்ளிகளில் இருந்து மாணவ-மாணவிகள் உற்சாகமாக தங்களது வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர். விடுதிகளில் தங்கி இருந்த மாணவர்களை பெற்றோர்கள் அழைத்து சென்றனர்.
இதனால் நெல்லை புதிய பஸ்நிலையம், வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் மாணவர்கள், பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
வருகிற ஜனவரி மாதம் 2-ந்தேதி (திங்கட்கிழமை) மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.