மனைவியை அவதூறாக பேசியதால் பெயிண்டருக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது

மனைவியை அவதூறாக பேசியதால் பெயிண்டருக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது

Update: 2022-12-11 18:45 GMT

பொள்ளாச்சி

திண்டுக்கல் மாவட்டம் பழனி தேவர்சிலை பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 32). பெயிண்டர். இவருக்கும் சிவகாசி, அம்மன்கோவில்பட்டி பகுதியை சேர்ந்த தொழிலாளி ஆரோக்கியராஜனுக்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் பழனியில் பெயிண்டிங் வேலை செய்தனர். இந்நிலையில் இருவரும் பொள்ளாச்சி வந்து கிடைக்கும் வேலைக்கு சென்றுவந்தனர். சம்பவததன்று இருவரும் பொள்ளாச்சி பெருமால்செட்டி வீதியில் மது அருந்திவிட்டு பேசிகொண்டிருந்தபோது சீனிவாசன் ஆரோக்கியராஜ் மனைவி குறித்து தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த ஆரோக்கிய ராஜன் மறைத்து வைத்திருந்த கத்தியால் சீனிவாசனை குத்தினார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் சீனிவாசனை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசுமருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் சீனிவாசனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இது குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து சீனிவாசனை கத்தியால் குத்திய ஆரோக்கியராஜனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்