பயிர் காப்பீடு வசதிக்காக கூட்டுறவு கடன் சங்கங்கள் இன்றும், நாளையும் இயங்கும்
பயிர் காப்பீடு வசதியாக கூட்டுறவு கடன் சங்கங்கள் இன்றும். நாளையும் இயங்கும் என தேனி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஆரோக்கியசுகுமார் தெரிவித்தார்.
தேனி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஆரோக்கியசுகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுக்கான பிரீமியம் தொகை செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. இங்கு விவசாயிகள் பயிர்க்காப்பீடு பிரீமியத் தொகை செலுத்தும் வகையில் இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்களும் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.