தாயின் பெருமை பற்றிய பாடலுக்கு மூதாட்டி ஆடியதை கண்டு கண்கலங்கிய கலெக்டர்

தாயின் பெருமை பற்றிய பாடலுக்கு மூதாட்டி ஆடியதை கண்டு கலெக்டர் கண்கலங்கினார்.

Update: 2023-10-10 21:15 GMT

தாயின் பெருமை பற்றிய சினிமா பாடலுக்கு மூதாட்டி ஒருவர் ஆடியதையும், அதனை கண்டு உணர்ச்சிவசப்பட்டு கலெக்டர் அருணா கண்கலங்கியதையும் படத்தில் காணலாம். 

கூடலூர்: கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட மேல் கூடலூர் ஸ்ரீராமகிருஷ்ணா முதியோர் இல்லத்தில் சமூக நலத்துறை சார்பில் உலக முதியோர் தின விழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவை மாவட்ட கலெக்டர் மு.அருணா குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். பின்னர் அவர், முதியோர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவப்படுத்தினார். மேலும் முதியோர் ஓய்வூதியம் பெறும் 100 வயது அடைந்த ஆண் மற்றும் 2 பெண் என மொத்தம் 3 முதியவர்களுக்கு ரூ.1,000 மதிப்பிலான சட்டை, வேட்டி மற்றும் துணிகளையும், பெண்களுக்கு ரூ.1,000

மதிப்பிலான புடவை, துணிகள் மற்றும் பெட் சீட்டுகளையும் வழங்கினார். பின்னர் முதியோர்களுடன் அமர்ந்து கலெக்டர் உணவு சாப்பிட்டார். முன்னதாக முதியோர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் மூதாட்டி ஒருவர் தாயின் பெருமை பற்றிய சினிமா பாடலுக்கு ஆடினார். அப்போது அதை பார்த்த கலெக்டர் அருணா, உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார். இது நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை நெகிழ்ச்சி அடைய செய்தது. இதைத்தொடர்ந்து சிறப்பாக நடனம், பாட்டு பாடிய முதியோர்களின் திறமையை கண்டு ரசித்ததுடன் அவர்களை கலெக்டர் பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் கூடலூர் ஆர்.டி.ஓ. முகமது குதரதுல்லா, மாவட்ட சமூக நல அலுவலர் பிரவீணா தேவி, நாவா சங்க தாயின் பெருமை பற்றிய பாடலுக்கு

மூதாட்டி ஆடியதை கண்டு கண்கலங்கிய கலெக்டர்செயலாளர் ஆல்வாஸ், ஸ்ரீராமகிருஷ்ணா முதியோர் இல்ல நிர்வாகி வசந்தகுமாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்