நகராட்சி கவுன்சிலர் உள்பட 9 பதவிகளுக்கான இடைத்தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் தொடக்கம்

தேனி மாவட்டத்தில் நகராட்சி கவுன்சிலர் உள்பட 9 பதவிகளுக்கான இடைத்தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் தொடங்கியது;

Update: 2022-06-20 17:04 GMT

தமிழகத்தில் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி பகுதிகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு அடுத்த மாதம் (ஜூலை) 9-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. தேனி மாவட்டத்தில் பெரியகுளம் நகராட்சி 26-வது வார்டு கவுன்சிலர், வடபுதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர், மொட்டனூத்து ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினர், ரெங்கசமுத்திரம் ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர், சின்னஓவுலாபுரம் ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர், முத்தாலம்பாறை ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர், தும்மக்குண்டு ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர், டி.வாடிப்பட்டி ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர், வடபுதுப்பட்டி ஊராட்சி 3-வது வார்டு உறுப்பினர் ஆகிய 9 பதவிகள் காலியாக உள்ளன. இந்த பதவிகளுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. முதல் நாளில் டி.வாடிப்பட்டி ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு கார்த்திக் என்பவர் மனு தாக்கல் செய்தார். மற்ற பதவிகளுக்கு முதல் நாளில் ஒருவர் கூட மனு தாக்கல் செய்யவில்லை. வேட்பு மனு தாக்கல் செய்ய வருகிற 27-ந்தேதி கடைசி நாள் ஆகும்.

Tags:    

மேலும் செய்திகள்