தூத்துக்குடியில் 7 பயனாளிகளுக்கு இஸ்திரி பெட்டி வழங்கல்

தூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சியில் 7 பயனாளிகளுக்கு இஸ்திரி பெட்டிகளை கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்.;

Update: 2023-10-09 18:45 GMT

தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். அதே போன்று மாற்றுத்திறனாளிகள் அமர்ந்து இருந்த பகுதிக்கு நேரடியாக சென்று அவர் மனுக்களை வாங்கினார். நேற்று ஒரே நாளில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 591 பேர் மனு கொடுத்தனர். மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் அறிவுறுத்தினார். இதனை தொடர்ந்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூ.37 ஆயிரத்து 387 மதிப்பலான இஸ்தி பெட்டிகளை கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார். நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்