அரசால் தேர்வு செய்யப்பட்ட 3 தமிழ் அறிஞர்களுக்கு உதவிதொகைக்கான ஆணை

அரசால் தேர்வு செய்யப்பட்ட 3 தமிழ் அறிஞர்களுக்கு உதவிதொகைக்கான ஆணை;

Update: 2023-04-24 18:45 GMT

திருவாரூரில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தமிழ்நாடு தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்ட 3 தமிழ் அறிஞர்களுக்கு உதவிதொகைக்கான ஆணையை கலெக்டர் சாருஸ்ரீ வழங்கினார்.

குறைதீர்க்கும் கூட்டம்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக அளித்து தீர்வு பெற்று வருகின்றனர்.அதன் படி நேற்று திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா்க்கும் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் பொதுமக்கள், பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல் கல்விக்கடன், வீட்டுமனைபட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 247 மனுக்களை பொதுமக்கள், கலெக்டரிடம் அளித்தனர். அதனை பெற்று கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

உதவித்தொகைக்கான ஆணை

அதனை தொடர்ந்து மாற்று திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 5 மாற்றுதிறனாளிகளுக்கு திருமண நிதியுதவிக்கான ஆணையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 3 பேருக்கு தையல் எந்திரமும், 2 பேருக்கு இஸ்திரி பெட்டியும் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் 2021-22-ம் ஆண்டு அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவி தொகை திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசால் தேர்வு செய்யப்பட்ட 3 தமிழ் அறிஞர்களுக்கு உதவிதொகைக்கான ஆணை வழங்கினார்.

மேலும், ஆட்சி மொழிச்சட்ட வாரத்தை முன்னிட்டு நடந்த பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், தனிதுணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) லதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் பாலசந்திரன், மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் புவனா உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்