16 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்குஅறிவியல், கணித பயிற்சி

அரசு பள்ளிகளில் வானவில் மன்றங்கள் மூலம் 16 ஆயிரத்து 582 மாணவ-மாணவிகளுக்கு அறிவியல், கணித பயிற்சி அளிக்கப்படுகிறது.

Update: 2023-02-14 19:00 GMT

வானவில் மன்றங்கள்

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் வகையில் இல்லம்தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், நான் முதல்வன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து அரசு பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளின் அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் வானவில் மன்றங்கள் தொடங்கப்பட்டன.

அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் வானவில் மன்றங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. இதில் 6-ம் வகுப்பு பயிலும் 2 ஆயிரத்து 601 மாணவர்கள், 2 ஆயிரத்து 889 மாணவிகள், 7-ம் வகுப்பு பயிலும் 2 ஆயிரத்து 760 மாணவர்கள், 2 ஆயிரத்து 770 மாணவிகள், 8-ம் வகுப்பு பயிலும் 2 ஆயிரத்து 766 மாணவர்கள், 2 ஆயித்து 796 மாணவிகள் என மொத்தம் 16 ஆயிரத்து 582 மாணவ-மாணவிகள் வானவில் மன்றங்களில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

படைப்பாற்றல்

இந்த வானவில் மன்றங்கள் மூலம் அறிவியல், கணித பாடங்களை மாணவ-மாணவிகள் ஈடுபாட்டுடன் கற்கும் வகையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால் அறிவியலில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளுதல், கற்பனை திறன், படைப்பாற்றல் திறன், திட்டங்களை செயல்படுத்துதல், அன்றாட வாழ்வில் அறிவியல் மற்றும் கணிதத்தின் பயன்பாட்டை அனுபவப்பூர்வமாக அறிதல் என மாணவ-மாணவிகளின் திறன்கள் மேம்படும் என்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்