10 ஆண்டுகளாக ஒத்தையடி பாதையில் சடலத்தை சுமந்து செல்லும் கிராம மக்கள்
அழகர் மலை கிராமத்தில் மயானத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் கடந்த 10 ஆண்டுகளாக சடலத்தை ஒத்தையடி பாதை வழியாக தட்டு தடுமாறி கிராமமக்கள் கொண்டு செல்லும் அவலநிலை ெதாடர்கிறது.
ஊட்டி
அழகர் மலை கிராமத்தில் மயானத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் கடந்த 10 ஆண்டுகளாக சடலத்தை ஒத்தையடி பாதை வழியாக தட்டு தடுமாறி கிராமமக்கள் கொண்டு செல்லும் அவலநிலை ெதாடர்கிறது.
மயானத்திற்கு சாலை வசதி இல்லை
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் ஊட்டியை அடுத்த உல்லத்தி ஊராட்சிக்கு உட்பட்டது அழகர் மலை கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 350-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
அழகர் மலை கிராமத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் மயானம் உள்ளது. மயானத்திற்கு செல்வதற்கு சரியாக சாலை வசதி இல்லாமல் உள்ளது. அதாவது சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு ஒத்தையடி பாதையாக உள்ளது. இதனால் கிராமத்தில் ஏதேனும் இறப்பு சம்பவங்கள் நிகழ்ந்தால் சடலத்தை ஒத்தையடி பாதையில் சுமந்து செல்லும் அவல நிலை தொடர்ந்து வருகிறது.
ஒத்தையடி பாதையில் சடலத்தை தூக்கிக்கொண்டு 4 பேர் நடந்து செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. ஒத்தையடி பாதையில் செல்லும்போது தவறி விழுந்தால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
ஒத்தையடி பாதை
இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த கிராமத்தை சேர்ந்த ராஜு என்பவர் உடல்நிலை பாதிப்பு காரணமாக இறந்து விட்டார். இதையடுத்து பொதுமக்கள் ஒத்தையடி பாதை வழியாக அவரது உடலை தட்டு தடுமாறி கொண்டு சென்றனர்.
இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இறந்த பின்னர் சுடுகாட்டுக்கு கூட நிம்மதியாக செல்ல முடியாமல் இந்த கிராம மக்கள் படும் அவதி குறித்து பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
போராட்டம் நடத்த முடிவு
இதுகுறித்து அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-
அழகர் மலை கிராமம் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். ஆனால் ஊரிலிருந்து சுடுகாட்டுக்கு செல்வதற்கு கடந்த 10 ஆண்டுகளாக சாலை வசதி இன்றி, ஒத்தையடி பாதை வழியாக சென்று வருகிறோம். இதுகுறித்து உள்ளாட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் இறப்பு சம்பவங்கள் நிகழும்போது மட்டும் சாலை வசதி ஏற்படுத்தி தருவதாக கூறுகின்றனர். ஆனால் அதன்பின்னர் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை.
மயானத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வருகிறோம். இந்தப் பிரச்சி னைக்கு விரைவில் தீர்வு காணாமல் விட்டால் கிராம மக்களை திரட்டி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.