கோவில்பட்டியில் மாணவர்களுக்கான கால்பந்து போட்டி:அரசு பள்ளி அணி சாம்பியன்

கோவில்பட்டியில் மாணவர்களுக்கான கால்பந்து போட்டியில் அரசு பள்ளி அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.

Update: 2023-01-09 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி கால்பந்து கழகம் சார்பில் வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டி நடந்தது. போட்டியில் 8 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் கோவில்பட்டி வ.உ.சி.அரசு மேல்நிலைப்பள்ளி அணியும், நாடார் மேல்நிலைப் பள்ளி அணியும் மோதின. இதில் அரசு மேல்நிலைப் பள்ளி அணி 2- 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 3-வது இடத்திற்கான போட்டியில் காமநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அணியும், லட்சுமிமில் மேல்நிலைப் பள்ளி அணியும் மோதின. இதில் காமநாயக்கன்பட்டி அணி 3- 2 என்ற கோல்களில் வெற்றி பெற்று 3-வது இடத்தை பிடித்தது.

இதனை தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவிற்கு கால்பந்து கழகச் செயலாளர் தேன்ராஜா தலைமை தாங்கினார்.

வெற்றி பெற்ற அணிகளுக்கு கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் கேடயங்கள் பரிசளித்தார். நிகழ்ச்சியில் கால்பந்து கழக நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள், பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பயிற்சியாளர் முருகேசன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்