திண்டுக்கல்லில் தொடர் கால்பந்தாட்ட போட்டி

திண்டுக்கல்லில் தொடர் கால்பந்தாட்ட போட்டி நாளை மறுநாள் நடக்கிறது.

Update: 2023-01-26 18:27 GMT

திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் தொடர் கால்பந்தாட்ட போட்டிகள் திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. காலை 6.30 மணி அளவில் அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் கால்பந்து அணியும், பார்வதி கால்பந்து அணியும் மோதுகிறது.

அதேபோல் 8.30 மணி அளவில் ஏ.பி.சி. பாலிடெக்னிக் கால்பந்து அணியும், மேட்டுப்பட்டி மேரி மாதா கால்பந்து அணியும் பலப்பரிட்சை நடத்துகின்றன. 10.30 மணிக்கு எஸ்.பி.எம். கால்பந்து அணி, கரிசல் கால்பந்து அணி மற்றும் மதியம் 3 மணிக்கு சுந்தரம் மெமோரியல் கால்பந்து அணி, செயின்ட் மைக்கேல் கால்பந்து அணி ஆகியவை மோதுகின்றன. இந்த தகவலை சங்க செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்