காவேரிப்பட்டணம் அணி வெற்றி

மாநில கால்பந்து போட்டியில் காவேரிப்பட்டணம் அணி வெற்றி பெற்றது.

Update: 2023-01-02 18:45 GMT

காவேரிப்பட்டணம்

காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பெண்ணார் புட்பால் கிளப் சார்பில் மாநில அளவிலான கால்பந்து போட்டி 2 நாட்கள் நடைபெற்றது. போட்டியில் தமிழகம், புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பல்வேறுஅணிகள் கலந்து கொண்டன. இதன் இறுதி போட்டி நடைபெற்றது. இதில் காவேரிப்பட்டணம் எஸ்.கே.எஸ். அணியும், ஓசூர் அணியும் விளையாடின. இதில் காவேரிப்பட்டணம் அணி வெற்றி பெற்றது. ஓசூர் அணி 2-ம் இடமும், தஞ்சாவூர் அணி 2-ம் இடமும், கள்ளக்குறிச்சி அணி 4-வது இடத்தை பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது. இதற்கு புட்பால் கிளப் ஒருங்கிணைப்பாளர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். பயிற்சியாளர் சிலம்பரசன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் சிவசங்கரன், ஹரிகுமார், ஹர்ஷவர்தன், மாதேசன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கினர். இதில் பயிற்சியாளர்கள் வெற்றி, முருகன், முல்லைவேந்தன் மற்றும் விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்