கால்பந்து கழக பொதுக்குழு கூட்டம்
நெல்லை மாவட்ட கால்பந்து கழக பொதுக்குழு கூட்டம் நடந்தது.
நெல்லை மாவட்ட கால்பந்து கழகத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் நெல்லை புதிய பஸ்நிலையம் அருகே உள்ள ஓட்டலில் நடைபெற்றது. கால்பந்து கழக தலைவர் செல்வின் தலைமை தாங்கினார். பொருளாளர் ராஜசேகர் வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்தார். கூட்டத்தில் கால்பந்து கழக துணைத்தலைவர் மோசஸ், பொதுக்குழு உறுப்பினர்கள், கால்பந்து வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர் கால்பந்து கழக செயலாளர் பால் ரோட்ரிக்கோ நன்றி கூறினார். நிகழ்ச்சியை கால்பந்து பயிற்சியாளர் செல்வராஜ் தொகுத்து வழங்கினார்.