பள்ளி மாணவர்களுக்கான கால்பந்தாட்ட போட்டி

கும்பகோணத்தில் பள்ளி மாணவர்களுக்கான கால்பந்தாட்ட போட்டி நடந்தது.

Update: 2023-01-21 19:50 GMT

கும்பகோணம்;

கும்பகோணம் நகர மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், கும்பகோணம் கால்பந்தாட்ட சங்கம் மற்றும் நகர மேனிலைப்பள்ளி பழைய மாணவர்கள் சங்கம் இணைந்து நடத்திய மாநில அளவிலான, 14 மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கிடையேயான கால் பந்தாட்ட போட்டி தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இப்போட்டியை நேற்று தமிழ்நாடு 8 -வது பட்டாலியன் அவில்தார் பிரசாத் தொடங்கி வைத்தார். முன்னாள் மாணவர்கள் சங்க செயலாளர் சிவகுமார், நிர்வாகிகள் ரவிசந்திரன், சிவசந்திரன், கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டியில் தஞ்சாவூர், நாகை, திருவாரூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 35 அணியினர் கலந்து கொண்டு விளையாடினர். 

Tags:    

மேலும் செய்திகள்