தருமபுரி மாவட்ட கால்பந்து போட்டியில் அதியமான் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த போட்டியில் தர்மபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர். மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் மணிவண்ணன், உதவி தலைமை ஆசிரியர் முருகன், உடற்கல்வி ஆசிரியர்கள் ஷாவலி மணி, முத்து, சசிகுமார் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.