சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்;
பள்ளிக்கூடங்களுக்கு காலை உணவுகளை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டும், அந்த உணவுகளை தனியார் சமைத்து வழங்க வேண்டு்ம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனை வாபஸ் பெறக்கோரியும், உணவை தாங்களே சமைத்து கொடுக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியும் சத்துணவு ஊழியர்கள் நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கீதா தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் செந்தில்நாதன், வட்டக்கிளை தலைவர் செல்வராஜ், செயலாளர் முத்துசாமி, பொருளாளர் முத்து, சாலை பணியாளர் சங்க இணைச் செயலாளர் முருகன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். முடிவில் சுதா நன்றி கூறினார்.