சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பகண்டைகூட்டுரோட்டில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர்.
ரிஷிவந்தியம்,
பகண்டைகூட்டுரோட்டில் உள்ள ரிஷிவந்தியம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில செயற்குழு உறுப்பினர் காஞ்சனா தலைமை தாங்கினார். சத்துணவு திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியம் ரூ.9 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், சத்துணவு திட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சத்துணவு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.