சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவிலில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவில்,
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சத்துணவு உண்ணும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்களைக் கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும், தேர்தல் வாக்குறுதிப்படி சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியராக்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், குடும்ப ஓய்வூதியமாக ரூ.6,750 ஆக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஜெபமணி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கவிதா வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் பொன் பாக்கிய தீபா ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.