சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2022-08-10 15:38 GMT

குடவாசல்

குடவாசல், வலங்கைமானில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குடவாசல்

தமிழக முதல்-அமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தினை அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தி சத்துணவு ஊழியர்களே சமைத்து வழங்க வலியுறுத்தி குடவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று மாலை சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோதையம்மாள் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை செயலாளர் தட்சணாமூர்த்தி, குடவாசல் வட்ட செயலாளர் அன்பழகன், மாவட்ட இணைச்செயலாளர் ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் குமார், ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

வலங்கைமான்

இதேபோல் வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க வட்ட செயலாளர் சுகுமார், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு உறுப்பினர் வீரமணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் பார்வதி, வட்ட செயலாளர் ராஜேஸ்வரி உள்ளிட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்துகொண்டனர். முடிவில் வட்ட பொருளாளர் மகாலட்சுமி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்