சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

குத்தாலத்தில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2023-07-03 18:45 GMT

குத்தாலம்:

காலை சிற்றுண்டி உணவு வழங்குவதற்கான பணியை வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குத்தாலம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய தலைவர் மேகலா தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கவிதா முன்னிலை வகித்தார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் ரேணுகா கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். முடிவில் முன்னாள் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்