சத்துணவு ஊழியர்கள் தர்ணா

ராமநாதபுரத்தில் காலி பணியிடங்களை நிரப்பக்கோரி சத்துணவு ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

Update: 2022-08-20 17:23 GMT

ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் முதல்வரின் கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் யூனியன் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அம்ரிதா தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர்கள் நவநீதகிருஷ்ணன், முத்துலட்சுமி, மாவட்ட துணை செயலாளர்கள் சகாய தமிழ்செல்வி, கங்கனாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் கணேசன் கோரிக்கை விளக்க உரையாற்றினார்.

போராட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் அறிவித்துள்ள காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு மையத்தில் தயார் செய்து வழங்கிட வேண்டும், அரசு ஊழியர்களுக்கு 58 வயதை 60 வயதாக உயர்த்தியதை போல் சத்துணவு ஊழியர்களின் பணிக்காலத்தையும் 60 வயதிலிருந்து 62 வயதாக உயர்த்திட வேண்டும், தமிழகத்தில் சத்துணவு மையங்களில் சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.இதில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க தலைவர் ராஜேந்திரன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சேகர் உள்பட பல்வேறு சங்கங்களின் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு பேசினர். கடலாடி ஒன்றிய தலைவர் பாலகிருஷ்ணன் நிறைவுரையாற்றினார். முடிவில், மாநில செயற்குழு உறுப்பினர் தனலட்சுமி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்