லாட்டரி சீட்டு விற்ற சத்துணவு ஊழியர் கைது

லாட்டரி சீட்டு விற்ற சத்துணவு ஊழியர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-02-23 19:38 GMT

தாயில்பட்டி, 

வெம்பக்கோட்ைட சப்-இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது லாட்டரி சீட்டு விற்ற ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் செவல்பட்டி ஊராட்சி அம்மையார்பட்டியை சேர்ந்தவர் ஓட்டக்காரன் (வயது 56) என்பதும், சத்துணவு ஊழியராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகள், ரூ.500 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்