உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

வாணியம்பாடியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு 4 கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.

Update: 2023-07-19 19:02 GMT

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அறிவுரையின்படி, வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வி.செந்தில் குமார் மற்றும் வாணியம்பாடி நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் எம். பழனிசாமி ஆகியோர் வாணியம்பாடி பஸ் நிலையம் பகுதிகளில் உள்ள கடைகள், பேக்கரி, ஸ்வீட் ஸ்டால், ஓட்டல்களில் ஆய்வு செய்தனர். அப்போது உரிமம் புதுப்பிக்கப்படாமல் இருந்த ஒரு கடைக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அளிக்கப்பட்டது. மூன்று இனிப்பகத்தில் இனிப்புகளுக்கு அதிகப்படியாக வண்ணம் சேர்க்கப்பட்டிருந்தது. அந்த கடைகளுக்கு முன்னேற்ற அறிக்கை அளிக்கப்பட்டது. இரண்டு கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர் இருந்ததால் தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இரண்டு கடைகளில் லேபிள் ஒட்டாத 3 கிலோ பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர். இரண்டு கடைகளுக்கும் தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் போண்டா, பஜ்ஜி போன்றவற்றை வாழை இலை மற்றும் மந்தாரை இலை, சில்வர் பிளேட்டில் வழங்க அறிவுறுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்