சாலையோர கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரி சோதனை

வாணியம்பாடியில் சாலையோர கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரி சோதனை நடத்தி அபராதம் விதித்தார்.

Update: 2023-06-02 17:19 GMT

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின் பேரில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தில்குமார் அறிவுறுத்தலின்படி, வாணியம்பாடி உணவு பாதுகாப்பு அலுவலர் (பொறுப்பு) பழனிசாமி நேற்று வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் இருந்து நேதாஜி நகர் வரை உள்ள மாலை நேர தள்ளுவண்டி கடைகள், பேக்கரி, பெட்டி கடைகள் மற்றும் உணவகங்களில் சோதனை மேற்கொண்டார்.

இந்த சோதனையின் போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், அதிக வண்ணம் பூசப்பட்ட கோழி இறைச்சி உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தும், அபராதம் விதித்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும் உணவகங்களில் கட்டாயமாக பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த கூடாது, ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக் கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்