ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறையினர் திடீர் ஆய்வு

குத்தாலம் பகுதி ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறையினர் திடீர் ஆய்வு

Update: 2023-06-08 18:45 GMT

குத்தாலம்:

குத்தாலம் தேர்வுநிலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சைவ, அசைவ ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி உத்தரவின் பேரில், குத்தாலம் பேரூராட்சி செயல் அலுவலர் ரஞ்சித் வழிகாட்டுதலின்படி நடந்த இந்த ஆய்வில் உணவு பாதுகாப்பு அலுவலர் சேகர், குத்தாலம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் சுப்ரமணியன் ஆகியோர் குத்தாலம் பகுதியில் உள்ள ஓட்டல்களில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது காலாவதியான உணவு பொருட்கள், இறைச்சி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் பாலிதீன் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் மொத்தம் ரூ.7 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

பின்னர் ஓட்டல் உரிமையாளர்களிடம் மீண்டும் காலாவதியான பொருட்கள் மற்றும் பாலிதீன் பைகள் பயன்பாடு நடந்தால் ஓட்டலின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கை செய்யப்பட்டது. இந்த ஆய்வில் பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்