பேட்டை:
நெல்லை அருகே மானூர் அம்பலவாண சுவாமி கோவிலில் ஆவணி மூலத்திருவிழா நடந்தது. இதையொட்டி நெல்லை கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை ஏற்பாட்டில் டவுன் உழவர் சந்தை அருகே உள்ள ஆதரவற்றோர் மீட்பு அவசர சிகிச்சை மையத்தில் உள்ள ஆதரவற்ற முதியோர்கள், மனநலம் குன்றியோருக்கு காலை உணவு வழங்கப்பட்டது. இதில் தி.மு.க. இளைஞர் அணி சார்பில் பங்கேற்ற ஆறுமுகராஜா, ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கினார். தொடர்ந்து மானூர் அருகே மாவடி சமுதாய நலக்கூடத்தை சுற்றிலும் மரக்கன்றுகள் நட்டினார். நிகழ்ச்சிகளில் மாவடி ஊராட்சி தலைவர் தன்சில்ரோஸ், துணைத்தலைவர் மாரிச்செல்வி, விவசாய சங்கத்தலைவர் முகமது இப்ராகிம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.