உணவு நிறுவனங்கள் பதிவு சான்றை புதுப்பிக்கலாம்:தொழிலாளர் உதவி ஆணையர் திருவள்ளுவன் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் உணவு நிறுவனங்கள் பதிவு சான்றை வருகிற 31-ந் தேதி வரைபுதுப்பிக்கலாம் என்று தொழிலாளர் உதவி ஆணையர் திருவள்ளுவன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-12-26 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் உணவு நிறுவனங்கள் பதிவு சான்றை வருகிற 31-ந் தேதி வரை புதுப்பிக்கலாம் என்று தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

பெயர் பலகை

தூத்துக்குடி மாவட்டத்தில் வர்த்தக நிறுவனங்கள், கடைகள் பெயர் பலகைகளை தமிழில் கட்டாயம் வைக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம் மற்றும் இதர மொழிகளின் எழுத்துக்களின் அளவு 5:3:2 என்ற விகிதத்திலும், தமிழ் மொழி முதலிலும், ஆங்கிலம் அடுத்ததாகவும், பிற மொழி அதற்கு கீழும் அமையுமாறும் பெயர் பலகை இருக்க வேண்டும். அதே போன்று பணியாளர்களை பணியமர்த்தி உள்ள அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களிலும் அனைத்து ஊழியர்களுக்கும் பொருத்தமான இருக்கை ஏற்பாடுகள் செய்து கொடுக்குமாறு அனைத்து தொழில் நிறுவன உரிமையாளர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதனை நடைமுறைப்படுத்தாத நிறுவனங்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

31-ந் தேதி

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான உணவு நிறுவனங்களும் 1956-ம் ஆண்டு உணவு நிறுவன சட்டத்தின் கீழ் ஏற்கனவே தங்களுக்கு வழங்கப்பட்ட பதிவு சான்றினை தொழிலாளர் துறை இணையதளம் மூலம் வருகிற 31-ந் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ளலாம். இதுவரை பதிவு சான்று பெறாத உணவு நிறுவனங்கள், பேக்கரிகள் உடன் பதிவு சான்றுகளை இணையதளம் மூலம் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் மோட்டார் போக்குவரத்து தொழிலாளர் சட்டத்தின் கீழ் ஏற்கனவே தங்களுக்கு வழங்கப்பட்ட பதிவு சான்றினை 30.11.2022-க்குள் புதுப்பித்தல் செய்து இருக்க வேண்டும். இதுவரை தங்கள் மோட்டார் போக்குவரத்து நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட பதிவு சான்றை உரிய தாமத கட்டணத்துடன் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ஒப்பந்த தொழிலாளர் சட்டத்தின் கீழ் பதிவு சான்று, உரிமச்சான்று பெற்ற நிறுவனங்கள், உரிய காலக்கெடுவுக்குள் புதுப்பித்துக் கொள்ளுமாறும், மேற்படி பதிவு சான்று மற்றும் உரிம சான்றுகளை உரிய காலக்கெடுவுக்குள் தொழிலாளர் துறை இணையதளம் மூலம் புதுப்பித்துக் கொள்ளாத நிறுவனங்கள் மீது உரிய சட்டங்களின்படி உரிய நடவடிக்கை எடுக்

Tags:    

மேலும் செய்திகள்