அமர் சேவா சங்கத்தில் குழந்தைகளுக்கு அன்னதானம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அமர் சேவா சங்கத்தில் குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தில் உள்ள குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கி அன்னதானத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் கனிமொழி, ஒன்றிய செயலாளர் சீனித்துரை, பொதுக்குழு உறுப்பினர் சாமிதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.