நாட்டுப்புற கலைஞர்கள் குறைதீர் கூட்டம்

நாட்டுப்புற கலைஞர்கள் குறைதீர் கூட்டம் 2-ந் தேதி நடக்கிறது.

Update: 2023-07-27 18:45 GMT

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- மாநில அரசு நாட்டுப்புற கலைகளில் ஈடுபட்டுள்ள கலைஞர்களுக்கு சமூக பாதுகாப்பும், நல உதவிகளும் வழங்குவதற்காக தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தினை அமைத்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் விருதுநகர் மாவட்ட கலை மன்றம் வாயிலாக இதுவரை மாவட்டத்தில் 2,851 கலைஞர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தால் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து நாட்டுப்புற கலைஞர்களும் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொள்வதற்கும், விண்ணப்பம் செய்து நல திட்ட உதவிகள் பெறுவதற்கும் பல்வேறு முறைகள் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

இதுவரையிலும் நாட்டுப்புறக் கலைஞர்கள் நாட்டுப்புற இசை கருவிகளான மேளம், நாதஸ்வரம், ஆதிமேளம், பறை, தாரை தப்பட்டை, உறுமி மேளம், நையாண்டி மேளம் மற்றும் பேண்ட் வாத்தியம் இசைத்தல் தவிர்த்து பிற நாட்டுப்புற கலைகளான வில்லிசை, ஒயிலாட்டம், கரகாட்டம், கும்மியாட்டம், கோலாட்டம், சிலம்பாட்டம், தெருக்கூத்து, தேவராட்டம், தோல்பாவை கூத்து, புலியாட்டம், மயிலாட்டம், மரக்கால் ஆட்டம், ராஜா ராணி ஆட்டம் முதலான கலைகளில் மாவட்ட அளவில் 1,682 நாட்டுப்புற கலைஞர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர். எனவே, கலெக்டர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 2-ந் தேதி நடைபெறும் நாட்டுப்புற கலைஞர்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்