கால்நடை தீவனத்தில் நோய் தாக்குதலால் விவசாயிகள வேதனை

கால்நடை தீவனத்தில் நோய் தாக்குதலால் விவசாயிகள வேதனை

Update: 2023-02-28 10:35 GMT

அருள்புரம்

கால்நடை தீவனத்தில் நோய் தாக்குதல் காரணமாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கால்நடை தீவனம்

திருப்பூரை அடுத்த கரைப்புதூர் மற்றும் கணபதிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விவசாயித்து அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பு உள்ளது. கால்நடைகளுக்கு தேவையான தீவனத்தில் முக்கியமான பயிராக சோளத்தட்டு உள்ளது.

இது குறித்து கரைப்புதூர் ஊராட்சி நொச்சிப்பாளையம் சேர்ந்த விவசாயி பழனிச்சாமி கூறியதாவது:-

ஒரு ஏக்கருக்கு உழுவதற்கு 3,500 ரூபாயும், ஒரு கிலோ சோளம் 70 ரூபாய் வீதம் ஒரு ஏக்கருக்கு 50 கிலோ சோளம் தேவைப்படுகிறது. சோளத்தை விதைப்பதற்கு ஒரு ஏக்கருக்கு 1000 ரூபாயும், வரப்பு கட்ட ஒரு ஏக்கருக்கு 3 ஆயிரம் ரூபாயும் செலவு ஆகிறது. 70 முதல் 90 நாட்களுக்குள் அறுவடை செய்யலாம். அறுவடை செய்ய ஒரு ஏக்கருக்கு 8 ஆயிரம் ரூபாயும் செலவு ஆகிறது.

சோளம் பயிரிட்டு 25 நாட்கள் தான் ஆகிறது. தற்போது சோளத்தட்டில் நோய் தாக்கி உள்ளது. இதுவரை ரூ.4 ஆயிரத்துக்கு இரண்டு முறை மருந்து அடித்துள்ளோன். ஆனால் சோளத்தட்டில் உள்ள நோய் தாக்குதல் அப்படியே உள்ளது. அரசு உத்தரவுப்படி வேளாண்மை துறை அதிகாரிகள் விவசாயிகளின் தோட்டத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து அதற்கான தீர்வுகளை காண வேண்டும்.

நோய் தாக்குதல்

ஆனால் எந்த வேளாண்மைத்துறை அதிகாரிகளும் நேரில் வருவதில்லை. தற்போது கால்நடை வளர்ப்பு குறைந்துகொண்டே வருகிறது. அதற்கான காரணங்களான அம்மை நோய் தாக்குதல், பால் விலை குறைவு, புண்ணாக்கு, தவிடு விலை உயர்ந்து கொண்டே வருகிறது. மேலும் சோளத்தட்டில் நோய் தாக்குதலும் சேர்ந்து உள்ளது.

இது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கால்நடை வளர்ப்பு முற்றிலும் அழிந்து விடும். எனவே திருப்பூர் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

-------

Tags:    

மேலும் செய்திகள்