ரூ.26 கோடியில் மேம்பாலம் அமைக்க அளவீடு பணி தொடங்கியது

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை எதிரே ரூ.26 கோடியில் மேம்பாலம் அமைக்க அளவீடு செய்யும் பணி தொடங்கியது.

Update: 2023-02-08 18:45 GMT

குருபரப்பள்ளி

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை எதிரே ரூ.26 கோடியில் மேம்பாலம் அமைக்க அளவீடு செய்யும் பணி தொடங்கியது.

அரசு மருத்துவக்கல்லூரி

கிருஷ்ணகிரியில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை போலுப்பள்ளியில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தினமும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இதேபோல், மருத்துவக்கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள், டாக்டர்கள், செவிலியர்கள் உள்பட பலரும், வந்து செல்கின்றனர்.

இந்த அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ளதால், நோயாளிகள் உள்பட அனைத்து தரப்பினரும், ஆபத்தான முறையில் சாலையை கடந்து சென்று வர வேண்டிய நிலை உள்ளது. இதனால் அரசு மருத்துவக்கல்லூரி பொதுமக்கள், வாகனங்கள் கடந்து செல்லும் வகையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

கட்டுமான பணிகள் தொடக்கம்

இதனை ஏற்று, நெடுஞ்சாலைத்துறையின் மூலம் ரூ.26 கோடி மதிப்பில் புதிய மேம்பாலம் அமைக்க ஒப்பந்தம் விடப்பட்டது. இதனை தொடர்ந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை எதிரே மேம்பாலம் அமைக்க அளவீடு பணிகள் தொடங்கியது. இந்த பணிகள் முடிந்து ஓரிரு வாரங்களில் கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்