டாஸ்மாக் கடையில் பறக்கும் படையினர் திடீர் சோதனை
திண்டிவனம் டாஸ்மாக் கடையில் பறக்கும் படையினர் திடீர் சோதனை
திண்டிவனம்
திண்டிவனம் மேம்பாலத்துக்கு கீழ் உள்ள டாஸ்மாக் கடையில் வெளிமாநில மற்றும் போலி மதுபானங்கள் விற்பனை நடைபெறுவதாக புகார் வெளியானது. இதையடுத்து சென்னை மண்டல டாஸ்மாக் அலுவலகத்தின் மாவட்ட மேலாளர்(பறக்கும்படை) சத்தியன் தலைமையில் 4 பேரை கொண்ட குழுவினர் நேற்று திண்டிவனம் டாஸ்மாக் கடையில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது கடையின் மேற்பார்வையாளர் வெங்கடேசன், விற்பனையாளர் செல்வகுமார் ஆகியோர் உடன் இருந்தனர். மதியம் 3 மணி முதல் இரவு 10 மணிவரை சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் போலி மற்றும் வெளிமாநில மதுபாட்டில்கள் எதுவும் சிக்கவில்லை என கூறப்படுகிறது.