சென்னையில் நாளை முதல் 26 ஆம் தேதி வரை டிரோன்கள் பறக்க தடை
நாளை முதல் வரும் 26 ஆம் தேதி வரை டிரோன்கள் பறக்க சென்னை மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது.;
சென்னை,
சென்னையில் ஜி-20 கூட்டங்கள் / நிகழ்வு நடைபெறும் பகுதிகளில் டிரோன்கள் பறக்க காவல்துறை தடை விதித்துள்ளது. நாளை முதல் வரும் 26 ஆம் தேதி வரை டிரோன்கள் பறக்க சென்னை மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது.
ஜி20 மாநாட்டு நிகழ்வுகள் மாமல்லபுரத்தில் நாளை மறுநாள் முதல் 26ம் தேதி வரை நடைபெற உள்ளன. ஜி20 மாநாட்டில் வெளிநாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளதை ஒட்டி பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது