கரூரில் பெண்ணிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு
கரூரில் பெண்ணிடம் 4 பவுன் சங்கிலியை பறிக்கப்பட்டுள்ளது.
கரூர்,
4 பவுன் சங்கிலி பறிப்பு
கரூர் கோயம்பள்ளி அருகே உள்ள செல்லி பாளையத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மனைவி நிர்மலா (வயது 51). இவர் அப்பகுதியிலுள்ள தங்களுக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் நிர்மலாவிடம் வழிகேட்பது போல் பேச்சுகொடுத்து உள்ளார். அப்போது நிர்மலா கண் இமைக்கும் நேரத்தில் அவர் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்கசங்கிலியை மர்மநபர் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.இதுகுறித்து நிர்மலாகொடுத்த புகாரின்பேரில் கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவுசெய்து தங்கசங்கிலியை பறித்து சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்.
பள்ளி ஆசிரியை
கரூர் வேலுச்சாமி புரம் பகுதிக்குஉட்பட்ட சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி சுமிதா (31) ஆசிரியர். இவர் சம்பவத்தன்று கரூர் ஜவகர் பஜார் பகுதியில் உள்ள காமராஜ் மார்க்கெட் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது கழுத்தில் அணிந்திருந்த 8½ பவுன் தங்க சங்கிலி மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சுமிதா ெகாடுத்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்குப்பதிவு செய்து தங்க சங்கிலியை மர்ம நபர்கள் யாரேனும் பறித்து சென்றனரா அல்லது அது கீழே விழுந்து தொலைந்து விட்டதா என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.