பூக்கள் விலை கிடு,கிடு உயர்வு; மல்லிகைப்பூ கிலோ ரூ.3,500-க்கு விற்பனை

தேனி, ஆண்டிப்பட்டி மார்க்கெட்டுகளில் பூக்கள் விலை கிடு,கிடுவென உயர்ந்தது. மல்லிகைப்பூ கிலோ ரூ.3,500-க்கு விற்கப்படுகிறது.

Update: 2023-01-13 20:30 GMT

தேனி, ஆண்டிப்பட்டி மார்க்கெட்டுகளில் பூக்கள் விலை கிடு,கிடுவென உயர்ந்தது. மல்லிகைப்பூ கிலோ ரூ.3,500-க்கு விற்கப்படுகிறது.

பூக்கள் விலை உயர்வு

பொங்கல் பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்க கடைவீதிகளில் குவிந்து வருகின்றனர். குறிப்பாக பூமார்க்கெட்டுகளில் பூக்கள் வாங்க ஏராளமாேனார் குவிந்தனர். ஒருபுறம் பண்டிகை காலத்ைதயொட்டி தேவை அதிகரிப்பு மற்றும் மறுபுறம் வரத்து குறைந்ததால் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

ஆண்டிப்பட்டி பூமார்க்கெட்டை பொறுத்தமட்டில் கடந்த சில நாட்களாக பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. இந்தநிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று பூக்களின் விலை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, ஆண்டிப்பட்டி பூமார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.3,500-க்கு விற்கப்பட்டது. அதேபோல் பிச்சிப்பூ, முல்லைப்பூ, கனகாம்பரம் ஆகிய பூக்களும் கிலோ ரூ.2,000-க்கு விற்பனை ஆனது. வரத்து குறைந்ததால் ஆண்டிப்பட்டி பகுதியில் மல்லிகைப்பூவுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

தேனி மார்க்கெட்

இதேபோல் தேனி பூமார்க்கெட்டிலும் பூக்களின் விலை அதிகரித்து காணப்பட்டது. அதன்படி, மல்லிகைப்பூ கிலோ ரூ.3,500-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் பிச்சிப்பூ, கனகாம்பரம், முல்லை, காக்கட்டான், செண்டுப்பூ, கோழிக்கொண்டை, மரிக்கொழுந்து உள்ளிட்ட பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்து காணப்பட்டது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தேனி மாவட்டம் முழுவதும் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. மாலை 6 மணிக்கு தொடங்கும் பனிப்பொழிவு மறுநாள் காலை 9 மணிவரையில் நீடித்து வருகிறது. பருவமழை பெய்ய வேண்டிய காலத்தில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுவதால் பூச்செடிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மல்லிகைப்பூக்களின் விளைச்சல் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. மொட்டுக்கள் செடியிலேயே கருகி விடுவதால் விளைச்சல் இன்றி, பூக்களின் வரத்து குறைந்தது. இதனால் விலை அதிகரித்துள்ளது என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்