பூக்கள் விலை உயர்வு

மயிலாடுதுறையில் பூக்கள் விலை உயர்ந்து காணப்பட்டது.

Update: 2022-10-03 18:45 GMT

சரஸ்வதி பூஜை விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை பகுதிகளில் உள்ள கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பூசணிக்காய், வாழை இலை மற்றும் பூஜை பொருட்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். மார்க்கெட்டில் பூக்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்தன. நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மாலை கட்டும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்து காணப்பட்டது. ஆனாலும் பொதுமக்கள் பூஜைக்கு தேவையான பூக்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்