ஆடி 18 பண்டிகையை முன்னிட்டுபரமத்திவேலூரில் பூக்கள் விலை உயர்வு

Update: 2023-08-02 19:00 GMT

பரமத்திவேலூர்:

ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு பரமத்திவேலூரில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது.

பூக்கள் ஏலம்

பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகள், கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் பல்வேறு வகையான பூக்களை பயிரிட்டுள்ளனர். இந்த பூக்களை விவசாயிகள் பரமத்திவேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைக்கு கொண்டு வருகின்றனர்.

வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுத்து செல்கின்றனர்.

விவசாயிகள் மகிழ்ச்சி

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி கிலோ ரூ.400-க்கும், சம்பங்கி கிலோ ரூ.160-க்கும், அரளி கிலோ ரூ.180-க்கும், ரோஜா கிலோ ரூ.160-க்கும், முல்லைப்பூ கிலோ ரூ.300-க்கும், செவ்வந்திப்பூ ரூ.200-க்கும், கனகாம்பரம் ரூ.400-க்கும் ஏலம் போனது.

இந்த நிலையில் ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு நேற்று நடந்த ஏலத்தில் குண்டுமல்லி கிலோ ரூ.600-க்கும், சம்பங்கி கிலோ ரூ.260-க்கும், அரளி கிலோ ரூ.240-க்கும், ரோஜா கிலோ ரூ.240-க்கும், முல்லைப்பூ கிலோ ரூ.500-க்கும், செவ்வந்திப்பூ ரூ.260-க்கும், கனகாம்பரம் ரூ.700-க்கும் ஏலம் போனது.

கடந்த வாரத்தை விட நேற்று பூக்கள் விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டதால் பூ விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்