முத்துமாரியம்மன் கோவில்களில் பூச்சொரிதல் விழா

முத்துமாரியம்மன் கோவில்களில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.;

Update: 2023-03-20 19:13 GMT

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடந்து முடிந்ததை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள மற்ற அம்மன் கோவில்களில் அடுத்தடுத்து பூச்சொரிதல் விழா நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை நகரில் வடக்கு 3-ம் வீதியில் உள்ள மகிமை நாயகி முத்துமாரியம்மன் கோவில், கீழ 4-ம் வீதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் நேற்று பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதையொட்டி திரளான பக்தர்கள் பூக்களை எடுத்து வந்து அம்மனுக்கு சாற்றினர். பக்தர்களால் வழங்கப்பட்ட பூக்களால் கருவறைகளில் நிரம்பி வெளிப்பகுதி வரை குவிந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்