காளியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா

மன்னார்குடி வானக்கார தெரு காளியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடந்தது.;

Update: 2023-08-14 18:45 GMT

மன்னார்குடி:

மன்னார்குடி வானக்காரத்தெருவில் காளியம்மன் கோவிலில் ஆடி திருவிழா கடந்த 11-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து சுமங்கலி பூஜையும், 12-ந் தேதி மாலை காளியம்மனுக்கு சர்க்கரை பாவாடை அலங்காரமும், மஞ்சள் காப்பு அலங்காரமும் நடந்தது. நேற்று மாலை பூச்சொரிதல் விழா நடந்தது. முன்னதாக யானை வாகன மண்டபத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பூக்களை தட்டுகளில் வைத்து ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு சாற்றி வழிபட்டனர். அம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து அம்மனுக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்