அரசு பஸ் மோதி பூ வியாபாரி பலி

ஸ்கூட்டரில் சென்றபோது, அரசு பஸ் மோதி பூ வியாபாரி பரிதாபமாக இறந்தார்.;

Update: 2023-05-18 16:42 GMT

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள காமாட்சிபுரத்தை சேர்ந்தவர் திருக்கோவில் (வயது 35). பூ வியாபாரி. அதே ஊரைச் சேர்ந்தவர் பழனி முத்து (34). நேற்று இருவரும், நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் பூக்களை வாங்கிக் கொண்டு வத்தலக்குண்டு நோக்கி ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தனர். மதுரை-பெரியகுளம் சாலையில் மணியகாரன்பட்டி அருகே திடீரென்று நிலைதடுமாறி ஸ்கூட்டரில் இருந்து தவறி 2 பேரும் கீேழ விழுந்தனர். அப்போது வத்தலக்குண்டுவில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பஸ் அவர்கள் மீது மோதியது. இதில் திருக்கோவில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த பழனி முத்துவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நிலக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்