பொங்கலை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வு - மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிப்பூ கிலோ ரூ.2,500-க்கு விற்பனை

மாட்டுத்தாவணியில் உள்ள மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிப்பூ ரூ.2,500-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.;

Update:2023-01-12 20:24 IST

மதுரை,

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் சூழலில் கரும்பு, மஞ்சள் உள்ளிட்டவற்றின் விற்பனையும், பூக்களின் விற்பனையும் சூடுபிடித்துள்ளது. அதே சமயம் பூக்களின் விலையும் தற்போது அதிகரித்துள்ளது.

மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிப்பூ ரூ.2,500-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல் முல்லைப்பூ கிலோ ரூ.1,300, பிச்சிப்பூ கிலோ ரூ.1,200-க்கு விற்பனையாகிறது.

மேலும் கனகாம்பரம் 300 ரூபாய் முதல் 1,500 ரூபாய்க்கும், ரோஜா 50 ரூபாய் முதல் 250 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்