கரூரில் வரத்து குறைவால் பூக்கள் விலை கடும் சரிவு
கரூரில் வரத்து குறைவால் பூக்கள் விலை கடும் சரிவடைந்துள்ளது. இதனால் மல்லிகை ஒரு கிலோ ரூ.300-க்கு விற்பனையானது.
கரூர்,
பூக்கள் சாகுபடி
கரூர் மாவட்டத்தில் நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவில் பயிரிட்டாலும் அதற்கு அடுத்த படியாக சூரியகாந்தி, நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய் வித்துக்களும், பூக்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தை பொறுத்த வரை வாங்கல், மாயனூர், லாலாபேட்டை உள்ளிட்ட காவிரி ஆற்று பகுதிகளில் மல்லிகை பூ சாகுபடி அதிக அளவில் செய்யப்பட்டு வருவகிறது.இவ்வாறு மேற்கண்ட பகுதிகளில் விளையும் பூக்களை கரூர் ெரயில் நிலையம் அருகே உள்ள பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு அங்கு ஏலம் விடப்படுகிறது. இதில் பூ வியாபாரிகள் பலர் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பூக்களை வாங்கி சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
விலை சரிவு
இந்நிலையில் மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.500-க்கு விற்பனையானது. நேற்று முன்தினம் மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.300-க்கு விற்பனையானது. முல்லை ரூ.200 முதல் ரூ.250-க்கும், அரளி ரூ.150-க்கும், ரோஜா ரூ.100-க்கும், கனகாம்பரம் ரூ.150-க்கும், ஜாதிப்பூ ரூ.200-க்கும், தாமரை பூ ஒன்று ரூ.10-க்கும் ஏலம் போயின.இந்தநிலையில் திருமணம், கோவில் திருவிழாக்கள் நடைபெறாததாலும், வரத்து குறைவினாலும் பூக்களின் விலை கடுமையான சரிவை சந்திந்துள்ளதாக பூ வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இருப்பினும் வியாபாரிகள் பலர் வந்து தங்களுக்கு தேவையான பூக்களை வாங்கி சென்றனர்.