ஓசூரில்ரூ.76 லட்சத்தில் மலர் வணிக வளாகம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்

Update: 2023-08-14 19:45 GMT

ஓசூர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் சாலையில், ஜி.ஆர்.டி. சர்க்கிள் அருகே, இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட காளிகாம்பாள் காமட்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ரூ.76 லட்சம் மதிப்பில் மலர் வணிக வளாகம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து, ஓசூரில் கட்டுமான பணிகளை ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, உதவி கலெக்டர் சரண்யா ஆகியோர் குத்து விளக்கேற்றி பூஜைகள் செய்து தொடங்கி வைத்தனர். இதில், தி.மு.க. இளைஞரணி மாநில துணை செயலாளர் சீனிவாசன், மாவட்ட அறங்காவலர் குழு நிர்வாகிகள், கோவில் செயல் அலுவலர்கள் சின்னசாமி, சாமிதுரை, ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஏ.மனோகரன், மாநகராட்சி கவுன்சிலர்கள் வெங்கடேஷ், மாரக்கா சென்னீரன் மற்றும் துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்