குமாரகோவில் வேளிமலை முருகன் கோவிலில் மலர் முழுக்கு விழா
குமாரகோவில் வேளிமலை முருகன் கோவிலில் மலர் முழுக்கு விழா நடந்தது.
தக்கலை,
குமாரகோவில் வேளிமலை முருகன் கோவிலில் மலர் முழுக்கு விழா நடந்தது.
மலர் முழுக்கு விழா
தக்கலை அருகில் உள்ள குமாரகோவில் வேளிமலை முருகன் கோவிலில் நேற்று இரவு மலர் முழுக்கு விழா நடைபெற்றது. ஆண்டுதோறும் ஆவணி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்று நடக்கும் இந்த விழா நேற்று மாலை 6.30 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெற்றது.
இந்த விழாவில் குமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை, கேரள மாநிலத்தில் இருந்து பக்தர்கள் காணிக்கையாக கொண்டு வந்த பல வண்ண மலர்களால் முருகபெருமானுக்கு மலர் அபிஷேகம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. விழாவில் பா.ஜ.க. மாவட்ட துணை தலைவர் குமரி ப.ரமேஷ், திருவிழா கமிட்டி புரவலர் பிரசாத், தலைவர் சுனில்குமார், செயலாளர் செந்தில்குமார் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.