தாழம்பூ அலங்காரம்

ஆவணி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையையொட்டி புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு தாழம்பூ அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Update: 2023-09-17 19:51 GMT

ஆவணி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையையொட்டி புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு தாழம்பூ அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில்

தஞ்சையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அரண்மனை தேவஸ்தானத்திற்குட்பட்ட 88 கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலின் கருவறையில் உள்ள மாரியம்மன் புற்றுமண்ணால் உருவானது. மூலவர் புற்று மண்ணால் உருவானதால் அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தைலக்காப்பு சாற்றப்படுகிறது.

இந்த கோவிலில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். மற்ற அம்மன் கோவில்களை விட புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். நேற்று ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் நடந்தே கோவிலுக்கு வந்தனர்.

தாழம்பூ அலங்காரம்

கிராமப்புறங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் முதல்நாள் இரவு வந்து கோவிலில் தங்கியிருந்து அம்மனை தரிசனம் செய்தனர். அம்மனுக்கு ஆவணிமாதம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு அலங்காரம் செய்யப்படும். ஆவணி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று தாழம்பூ அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்